பெங்களூரு: எந்த சிகிச்சை அளித்தும் குணமடைய முடியாத தீவிர நோயாளிகள் கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமை, கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகாவில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் குணமடையாமல் தவிக்கும் நிலையில் இருக்கும் நோயாளி கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை இந்த வாய்ப்பு வழங்குகிறது. கருணைக் கொலையை அனுமதிப்பதா என்பதைத் தீர்மானிக்க மூன்று மருத்துவர்களைக் கொண்ட இரண்டு குழு அமைக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோயாளி கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமை குறித்து மாவட்ட அளவில் நிபுணர் டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். சிகிச்சை அளித்தாலும் நோயாளி உயிர் பிழைக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்த பிறகு, நோயாளியை கண்ணியமாக இறக்க அனுமதிக்கும் முடிவை இந்தக் குழு எடுக்கும்.
The post எந்த சிகிச்சை அளித்தும் குணமடையாமல் தவிக்கும் நோயாளிகளை கருணைக் கொலை செய்ய கர்நாடகாவில் அனுமதி appeared first on Dinakaran.