புதுடெல்லி: பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சண்டிகரில் செப்டம்பர் 2024 இல் நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங்குக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை என்ஐஏ பிறப்பித்தது. அதாவது, ஓய்வுபெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) நடத்திய சதியின் ஒரு பகுதியாகும்.