புதுடெல்லி: ஜார்க்கண்டில் தேசிய அனல்மின் நிறுவனத்தால் (என்டிபிசி) இயக்கப்பட்டு வரும் இரு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் அவற்றின் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.
பிகாரின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள ககல்கான் சூப்பர் அனல்மின் நிலையத்தையும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பராக்கா அனல்மின் நிலையத்தையும் இணைக்கும் வகையில் என்டிபிசி சார்பில் தனி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் சரக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.