டெல்லி: என்னுடைய பேச்சு புண்படுத்தி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்கள் நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் வலுத்தது. இதையடுத்து “தமிழ்தான் உலகின் மூத்த மொழி என்று மோடி அரசு பல இடங்களில் கூறியுள்ளது. மோடி அரசு தமிழ் மொழிக்கு எதிரானது இல்லை” என்றும் மாநிலங்களவையில் தர்மேந்திர பிரதான் பேசினார்.
The post என்னுடைய பேச்சு புண்படுத்தி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் appeared first on Dinakaran.