டெல்லி: எம்புரான் திரைப்பட கருத்து சுதந்திர விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், அதன் மீதான விவாதம் குறித்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், வாக்காளர் பட்டியல் மோசடி, சமாஜ்வாதி கட்சியின் எம்பி மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை வேண்டுமென்று விதி 267ன் கீழ் இன்று நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் தன் மீதான விவாதங்கள் அனைத்திற்கும் மாநிலங்களவை தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து விவாதிப்பதற்காக திமுக எம்பி வில்சன் நோட்டீஸ் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்புரான் திரைப்பட காட்சிகளை, விதிகளை மீறி நீக்குவதற்கான உத்தரவை ஒன்றிய அரசு பிறப்பித்து வருவதை ஏற்புடையது அல்ல என்ற கோரிக்கையும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். ஆனால் அந்த தீர்மானங்கள் மீதான எந்தவொரு விவாதமும் எடுத்துக்கொள்ளப்படாது என்ற கருத்தை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
The post எம்புரான் திரைப்பட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.