ஜோத்பூர்: பஞ்சாப்பிலுள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லை வழியே பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்களை கடத்துவதும், இதை எல்லை பாதுகாப்பு படை தடுத்து, சுட்டு வீழ்த்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதுகுறித்து கடந்த மாதம் 11ம் தேதி எல்லை பாதுகாப்பு படை வௌியிட்ட்ட அறிக்கையில், “2024ம் ஆண்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் எல்லைகளை பாதுகாக்க விரைவில் ஆளில்லா விமான எதிர்ப்பு பிரிவை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்பு படையின் 60வது நிறுவன நாள் விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா,“வரும் காலங்களில் ஆளில்லா விமானங்களின் அச்சுறுத்தல் இன்னும் அதிகமாகும். இதனால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், அரசும் இணைந்து செயல்பட உள்ளது. எல்லைகளை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு துறையில் ஆளில்லா விமானங்களை எதிர்க்க தனிப்பிரிவை தொடங்க உள்ளோம்” என்றார்.
The post எல்லைகளை பாதுகாக்க டிரோன் எதிர்ப்பு பிரிவு உருவாக்கப்படும்: அமித் ஷா appeared first on Dinakaran.