திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் 6 கிலோமீட்டர் சுற்றளவில் எங்கும் டிரோன் கேமராக்களை பறக்க தடை விதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக, கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் கேமராக்கள் செயல்படுவதைத் தடுக்க, ஆன்டி-டிரோன் கேமரா ஜாமர் பொருத்தப்பட உள்ளது. இதற்காக, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 6 கிலோமீட்டர் சுற்றளவில் ஜாமர்கள் நிறுவப்படுகின்றன. இதற்காக ஐசிஇஎல் அமைப்புடன் இணைந்து, கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை டிரோன் எதிர்ப்புப் பகுதியாக அமைக்க ஜாமர்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏழுமலையான் கோயிலுக்கு மத்திய புலனாய்வு அமைப்புகளிடமிருந்து அடிக்கடி எச்சரிக்கைகள் வந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சமூக விரோத சக்திகளிடமிருந்து டிரோன் கேமராக்கள் மூலம் கோயிலின் மீது எதிர்பாராத தாக்குதல்களைத் தடுக்க உதவும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
The post ஏழுமலையான் கோயிலை சுற்றி 6 கி.மீ டிரோன் பறக்க தடை appeared first on Dinakaran.