கொல்கத்தா: பீகார் மாநிலம் சியோஹர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆசிப் கமர். இவர் மேற்குவங்க மாநிலம் கரக்பூரில் உள்ள ஐஐடியில் 3ம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். அங்கு மதன்மோகன் மாளவியா விடுதியில் தங்கி படித்து வந்த முகமது ஆசீப் கமர், கடந்த சனிக்கிழமைஇரவு முதல் விடுதி அறையில் இருந்து வௌியே வரவில்லை. இதுகுறித்து நேற்று ஐஐடி வளாகத்தில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே கமர் தங்கி இருந்த அறைக்கு சென்ற காவலர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு கமர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
The post ஐஐடி கரக்பூரில் 3ம் ஆண்டு மாணவன் தற்கொலை: காவல்துறை விசாரணை appeared first on Dinakaran.