சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது, வந்தே பாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் உட்பட வந்தே பாரத் ரயில் வகைகள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் முதல் அதிவேக வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி ஐசிஎஃப் ஆலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.