சென்னை: இந்தியாவில் ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரைவாக பார்ப்போம்.
சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் சிட்டி 100 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.