ஐதராபாத்: ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்ற தனியார் பேருந்து, லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஏலூரு மாவட்டம் சோமவரப்பாடு அருகே பேருந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியது. விபத்தில் 3 பயணிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் உள்பட மேலும் சிலர் காயமடைந்தனர்.
The post ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்ற தனியார் பேருந்து, லாரி மீது மோதி விபத்து appeared first on Dinakaran.