இஸ்லாமாபாத்: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பாக். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததற்கும், அங்கு அரசியலமைப்பு 370வது பிரிவை ரத்து செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரங்களுக்கான அமைச்சர் அமீர் முகம் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தில் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானம் முழுஆதரவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி மீது இந்தியா தொடர்ந்து அத்துமீறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலையிட்டு தனது பங்கை ஆற்ற வேண்டும் என்று அமைச்சர் அமீர் முகம் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஐநா. தலையிட வேண்டும் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு பாக்.நாடாளுமன்றத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.