புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல், ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில், உலகளாவில் புகையிலை தொடர்பான இறப்புக்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. ஆண்டு தோறும் 14லட்சம் பேர் மதுபானத்தால் உயிரிழக்கின்றனர். ஐபிஎல் போட்டி இந்தியாவில் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டு நிகழ்வாகும். விளையாட்டுடன் இணைக்கப்பட்ட எந்தவொரு நிகழ்விலும் புகையிலை/மதுபானங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவிக்க கூடாது. எனவே ஐபிஎல் போட்டிகளின்போது புகையிலை மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஐபிஎல் போட்டியின்போது புகையிலை, மதுபான விளம்பரத்துக்கு தடை: பிசிசிஐக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் appeared first on Dinakaran.