சென்னை: இன்றைய இணைய உலகில் மில்லியன் கணக்கான டிஜிட்டல் சாதன பயனர்கள் தங்களுக்கு வேண்டியதை கூகுள் தளத்தில் நினைத்த நேரத்தில் தேடி (Search) தெரிந்து கொள்கின்றனர். உலக அளவில் நாளொன்றுக்கு இந்தத் தேடலின் எண்ணிக்கை பில்லியனை கடப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2024-ம் ஆண்டில் இந்தியாவில் பயனர்கள் அதிகம் தேடிய விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல், ஒலிம்பிக், டி20 உலகக் கோப்பை என விளையாட்டு களமும், ஸ்திரீ 2 முதல் மகாராஜா வரை என திரைப்படங்கள் குறித்தும், எப்படி வாக்களிப்பது, காற்றின் தரம் போன்றவையும், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்தும், வினேஷ் போகத், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் குறித்தும் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டுள்ளது.