புதுடெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை 1 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு நீடித்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8 வது முறையாக நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்தம் 1 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். இது கடந்த ஆண்டை விட 8 நிமிடம் குறைவாகும். கடந்த ஆண்டு 1 மணி நேரம் 25 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். 2024-ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட் உரையை குறைந்த நேரத்தில் அதாவது 56 நிமிடங்களில் முடித்தார்.