புதுடெல்லி: நாடு முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை பாதிக்கப்பட்டன. மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் யுபிஐ செயல் இழந்தது. நேற்று மீண்டும் யுபிஐ பரிவர்த்தனை முடங்கியது. நேற்று காலை 11.30 மணிக்கு இதுதொடர்பான புகார்கள் பதிவாகின. கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற முன்னணி கட்டண செயலிகள் மூலம் கட்டணங்கள் செலுத்த முடியாதததால் அனைவரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். பகல் 12.56 மணி வரை 2,147 புகார்கள் பதிவாகியுள்ளன. 80 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் தவித்தனர். இதையடுத்து என்பிசிஐ இதுபற்றி நடவடிக்கை எடுத்து பிரச்னையை தீர்க்க முயன்றது. மாலையில் மீண்டும் யுபிஐ செயல்பட்டது.
The post ஒரு மாதத்திற்குள் யுபிஐ பரிவர்த்தனை 3வது முறை முடக்கம் appeared first on Dinakaran.