புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் சமர்பித்துள்ள ஆவணத்தில், ‘‘ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், மின்னணு வாக்கு இயந்திரங்கள், விவிபேட்களை பாதுகாப்பாக வைக்க கூடுதலாக சுமார் 800 கிடங்குகள் தேவைப்படும். இவைகளை அமைக்க செலவு அதிகமாகும். ஏனெனில் அனைத்து கிடங்களுக்கும் பாதுகாப்பு பணியாளர்கள் நியமித்தல், மாதாந்திர மற்றும் காலாண்டு ஆய்வுகள், தீத்தடுப்பு எச்சரிக்கைகள், சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டும். இந்த வசதிகளுடன் கிடங்கு அமைக்க நிலம், கட்டுமான செலவுகளையும் மாநில அரசுகளே ஏற்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 772 மாவட்டங்கள் உள்ளன. இதில், 2012ல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்னணு வாக்கு இயந்திர கிடங்குகள் கட்டும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. 2023 மார்ச் நிலவரப்படி, 194 கிடங்குகளின் பணி நிறைவடைந்துள்ளது. 106 கிடங்குகள் கட்டுமானத்தில் உள்ளன. 13 கிடங்குகளுக்கு இதுவரை நிலம் ஒதுக்கப்படவில்லை.
The post ஒரே நாடு ஒரே தேர்தல் இவிஎம்களை வைக்க 800 கிடங்குகள் தேவை: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.