பாலக்காடு : நரிக்குழி சந்திப்பில் ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்ததில் கூட்டுறவு வங்கி மேலாளர் கருகி பரிதாபமாக பலியானார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் மாரமங்கலத்தில் கூட்டுறவு வங்கி மேலாளராக பணியாற்றி வந்தவர் சிபி (60). இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு எழலூர்-தொடுப்புழா சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
நரிக்குழி சந்திப்பில் செல்லும் போது திடீரென காரின் முன்பகுதியில் லேசான புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. காரை விட்டு இறங்கமுடியாமல் தவித்த சிபி தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் தொடுப்புழா தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் சிபி உடலை மீட்டு களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடுப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஓடும் காரில் தீப்பிடித்து கூட்டுறவு வங்கி மேலாளர் பரிதாபமாக கருகி பலி appeared first on Dinakaran.