புதுடெல்லி: சர்வதேச குற்ற செயல்களை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இந்தியா உள்பட 184 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு பிற நாடுகளில் தங்கி உள்ள அல்லது பதுங்கி உள்ள தேடப்படும் குற்றவாளிகளை கைது செய்து ஒப்படைப்பது, சர்வதேச குற்றச்செயல்களை துப்பு துலக்குவது உள்ளிட்ட பணிகளாகும்.
இந்நிலையில் 2023ம் ஆண்டு முதல் உறுப்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இன்டர்போல் வெளியிட்ட ரெட் கார்னர் நோட்டீஸ்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இது 2023ம் ஆண்டு முதல் பிறப்பிக்கப்பட்ட ரெட் கார்னர் நோட்டீஸ்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2023ல் 100, 2024ல் 107 மற்றும் 2025ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 56 ரெட் கார்னர் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டன” என தெரிவித்துள்ளனர்.
The post கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 263 ரெட் கார்னர் நோட்டீஸ்: இன்டர்போல் புள்ளிவிவரம் appeared first on Dinakaran.