டெல்லி: கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். வாராக்கடன் தள்ளுபடியல்ல; வங்கி நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் தங்க நகை கடன், சொத்தின் பேரில் கடன்,வீட்டுக்கடன், கல்வி கடன், வாகன கடன், விவசாய கடன், தனிநபர் கடன், நம்பிக்கையின் அடிப்படையில் தரப்படும் வணிக கடன், வணிகத்தின் மதிப்பை நம்பிதரப்படும் கடன் என பல்வேறு வகையான கடன்கள் அதிக அளவில் தரப்படுகிறது.. அப்படி வழங்கப்படும் கடனை வசூலிக்க முடியாவிட்டால் அவற்றை வங்கிகளால் வசூலிக்க முடியாமல் போனால், அதை வாராக்கடனில் வரவு வைப்பார்கள்.
கடன்கள் அளிக்கப்பட்டு, 4 ஆண்டுகள் முடிந்தும் அந்த கடன்கள் திரும்ப வசூலிக்கப்படாவிட்டால் அவை வாராக்கடன்களாக கருதப்படும். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கிகளின் வாரியங்கள் முடிவுப்படி, அந்த வாராக்கடன்கள், கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 10 நிதியாண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி வாராக்கடன், கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ஒரு கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்;
வங்கிகளால் கடன்கள் அளிக்கப்பட்டு, 4 ஆண்டுகள் முடிந்தும் அந்த கடன்கள் திரும்ப வசூலிக்கப்படாவிட்டால் அவை வாராக்கடன்களாக கருதப்படும். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கிகளின் வாரியங்கள் முடிவுப்படி, அந்த வாராக்கடன்கள், கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவது வழக்கம். அதுபோல், கடந்த 10 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.16 லட்சத்து 35 ஆயிரம் கோடி வாராக்கடன்கள் நீக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, 2018-2019 நிதியாண்டில், ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 265 கோடி வாராக்கடன்கள் நீக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக, 2014-2015 நிதியாண்டில் ரூ.58 ஆயிரத்து 786 கோடி வாராக்கடன்கள் நீக்கப்பட்டன.
2022-2023 நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 324 கோடி, 2023-2024 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 270 கோடி வாராக்கடன்கள் நீக்கப்பட்டிருக்கிறது. கணக்கு புத்தகத்தில்இருந்து நீக்கப்பட்டதால், கடன்கள் தள்ளுபடி என்று அர்த்தம் அல்ல. எனவே, கடன் பெற்றவர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. அவர்களிடம் வாராக்கடன்களை திரும்ப வசூலிக்க வங்கிகளுக்கு பல்வேறு வழிமுறைகளை தற்போது பின்பற்றிவருகின்றன. சிவில் கோர்ட்டுகளிலோ அல்லது கடன் மீட்பு தீர்ப்பாயத்திலோ வழக்கு தொடரலாம். திவால் சட்டப்படி, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம்” என்று கூறினார்.
The post கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.