பெங்களூரு: கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடி 11 ஆண்டுகளில் 11 மிகப்பெரிய பொய்களைக் கூறியிருக்கிறார். முதல் பொய், வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாகக் கூறியது. 2வது பொய், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறியது. இப்போது இளைஞர்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா? கண்டிப்பாக இல்லை.
ஆனாலும் நம் இளைஞர்கள் ஏன் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று தெரியவில்லை? சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆதரிக்கிறார்களா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏழைகளுக்கு சேவை செய்வதற்காகவே காங்கிரஸ் தலைவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் ஆதரிக்காதது பெரும் வியப்பாக இருக்கிறது.
மோடியின் 3வது பொய், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகக் கூறியது, 4வது பொய் கங்கையை 2022ம் ஆண்டிற்குள் சுத்தம் செய்வதாகக் கூறியது, 5வது பொய், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தித் தொழிலில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறியது, 6வது பொய் அனைத்து இந்தியர்களுக்கும் 2022ம் ஆண்டிற்குள் வீடு கட்டித்தருவதாகக் கூறியது, விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்துவதாகக் கூறியது 7வது பொய்.
பொய் சொன்னால் மக்கள் நம்பமாட்டார்கள் உள்பட 11 மிகப்பெரிய பொய்களை பிரதமர் மோடி கூறியிருக்கிறார். கடைசியாக நடந்த ராஜ்ய சபை தேர்தல் உட்பட 12 தேர்தல்களில் ஒரு பொய்யான வாக்குறுதியைக் கூட நான் கொடுத்ததில்லை. பொய்களை நம்பினால் கஷ்டப்படுவீர்கள் என்று மக்களை எச்சரித்தார். அவர் சொன்ன எல்லாமே பொய்தான். இவ்வாறு விமர்சனம் செய்தார்.
The post கடந்த 11 ஆண்டுகளில் 11 மிகப்பெரிய பொய்களை சொன்ன பிரதமர் மோடி: கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.