ஜனவரி 16ம் தேதி, 1970ம் ஆண்டில் லிபியாவின் அதிபராகப் பதவியேற்ற முயம்மர் கடாபி தனது ஆட்சி 42 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கப்போகின்றன என்பது குறித்தும் கற்பனை செய்திருக்க மாட்டார். லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கடாபி வீழ்ந்தது எப்படி?
கடாபி ஆட்சியில் இருந்த காலத்தில், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட எல்லா வகையான எதிர்ப்பையும் கொடூரமான முறைகளில் தகர்த்தெறிந்தார்.