விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். முதலில் பேட் செய்த லக்னோ அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில், 72 ரன்களும் நிக்கோலஸ் பூரன் 30 பந்தகளில் 75 ரன்களும் விளாசி மிரட்ட ஒரு கட்டத்தில் லக்னோ அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் குவித்திருந்தது.
இதனால் அந்த அணி எளிதாக 240 முதல் 250 ரன்களை குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 7 ஓவர்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் ஆகியோர் அற்புதமாக செயல்பட்டு லக்னோ அணியை 209 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். குல்தீப் யாதவ் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 42 ரன்ளை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.