சென்னை: டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாகக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த ஒரு வார காலமாக பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கனமழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.