கர்நாடகா: கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி கர்நாடக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயப்படுத்தி உயர் கல்வித்துறை சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பாலிடெக்னிக் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிற 21ம் தேதிக்குள் அறிக்கை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு உள்பட மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாகவும், சில கல்லூரிகளில் ராக்கிங் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் கல்லூரிகளில் நடப்பதை தடுக்கவும், மாணவ – மாணவிகளை தீவிரமாக கண்காணிக்கும் விதமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமரா: உயர் கல்வித்துறை உத்தரவு! appeared first on Dinakaran.