கர்நாடகா: 2024ல் கர்நாடகாவில் உள்ள SBI வங்கியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 17 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பேக்கரி நடத்தி வரும் விஜயகுமார் என்பவருக்கு ரூ.15 லட்சம் கடன் தர மறுத்ததால் திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளார். Money Heist போன்ற சீரிஸ் மற்றும் யூடியூப் பார்த்து பயிற்சி எடுத்துக்கொண்டதாக வாக்குமூலம் அளித்தனர். கிணற்றில் மறைத்து வைத்திருந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதி டவுன் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி, வங்கியை உடைத்து ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
இந்த நிலையில், வங்கியைக் கொள்ளையடித்த நபர்களை ஐந்து தனிப்படை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் கடந்த ஆறு மாதமாக எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் காவல்துறையினர் திக்குமுக்காடி வந்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட தொடர் விசாரணையில், தமிழ்நாடு மாநிலம் மதுரையைச் சேர்ந்த நபர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ள தெரியவந்துள்ளது
அந்த தகவலின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜய்குமார் (30), விஜய்குமார் (28), நியாமதி அபிஷேக் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் ஹொன்னாலி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் உள்ளிட்ட 6 நபர்களைக் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் வங்கியைக் கொள்ளையடிக்க யூடியூப் மற்றும் ஓடிடி தளங்களில் கொள்ளை தொடர்பான வீடியோக்களை பார்த்து, திட்டமிட்டுக் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை பிடித்த 10 காவல்துறையினருக்கு அரசு சார்பில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பதக்கம் வழங்கியுள்ளார். மேலும், சிறப்பு வெகுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கர்நாடகாவில் SBI வங்கியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 17 கிலோ நகைகளை கொள்ளையடித்த 6 நபர்கள் கைது: நகைகள் மீட்பு appeared first on Dinakaran.