புதுடெல்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா சம்பந்தப்பட்ட முடா வழக்கில் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டுள்ளது. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நில ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. முடா கையகப்படுத்திய 3 ஏக்கர் 16 குண்டாஸ் நிலத்துக்குப் பதிலாக முதல்வர் சித்தராமையா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவி பிஎம் பார்வதி பெயரில் முக்கிய இடங்களைபெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான பணமோசடி வழக்கில் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான 140 அசையா சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
The post கர்நாடக முதல்வர் வழக்கில் ரூ.300 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.