பாட்னா: பீகாரில் கதிஹர் மாவட்டத்தில் உள்ள கத்வா சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ஷகீல் அகமத் கான். இவரது மகன் அயான் அகமத் கான் பாட்னாவில் உள்ள அதிகாரப்பூர்வ குடியிருப்பில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலின்பேரில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post காங். எம்எல்ஏவின் மகன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.