டெல் அவிவ்: இஸ்ரேல்-காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹமாஸ் குழுவினர் நேற்று 8 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 13-ம் தேதி எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.