
‘வன மக்களின் தோழன்’ என்று அழைக்கப்படும் வி.பி.குணசேகரன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் பழங்குடியினர், மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காகக் களமாடிவரும் சமூகப் போராளி. பழங்குடி மக்களின் நில உரிமை மீட்பு, கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் ஆகியவற்றுக்காகச் சுணக்கமின்றி உழைத்துவரும் வி.பி.குணசேகரனுடன் உரையாடியதிலிருந்து…
‘கால்நடைகளை வனப் பகுதியில் மேய்க்க உரிமையில்லை’ என்று 2022இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நில உரிமை, வன உரிமை என்று வரும்போது, பழங்குடி மக்களை இதுபோன்ற தீர்ப்புகள் கட்டுப்படுத்த என்ன காரணம்?

