நவ்சாரி: காந்தியின் கொள்ளு பேத்தி நீலம் பென் பரிக் மரணமடைந்ததால், குஜராத் சமூக சேவகர்கள் கவலையடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் நவ்சாரியின் அல்கா சொசைட்டி பகுதியில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி நீலம் பென் பரிக் (93) வசித்து வந்தார். இவர் மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் வழித்தோன்றல் ஆவார். தனது தாயார் ராமிபென் மற்றும் தந்தை யோகேந்திரபாய் பாரிக் ஆகியோரின் சேவைகளால் ஈர்க்கப்பட்ட இவர், குழந்தை பருவத்திலிருந்தே காந்திய கொள்கைகளை பின்பற்றி வந்தார். பெண்களின் நலனுக்காகவும் கல்விக்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டார். பல்வேறு சமூக அமைப்புகளுடன் தொடர்புடைய அவர், பெண்கள் கல்வி, சுயசார்பு மற்றும் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்தார்.
இந்த நிலையில் நீலம் பென் பரிக் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று அவரது மகன் டாக்டர் சமீர் பாரிக் இல்லத்திலிருந்து தொடங்கி, வேராவல் தகனக்கூடத்தை அடையும். அவரது மறைவால் பல்வேறு சமூக மக்களும் கவலையடைந்துள்ளனர். மகாத்மா காந்தியின் வாரிசாகத் திகழ்ந்த நீலம் பென் பரிக், காந்தியிஜ் சித்தாந்தபடி வாழ்ந்து காட்டினார் என்றும், அவரது வாழ்க்கை முறை பலருக்கும் உத்வேகமாக அமைந்ததாக அவரது உறவினர்கள் கூறினர். அரது மறைவால் நாடு ஒரு நல்ல ஆளுமையை இழந்துவிட்டது என்றும் சமூக சேவகர்கள் கூறினர்.
The post காந்தியின் கொள்ளு பேத்தி மரணம்: குஜராத் சமூக சேவகர்கள் இரங்கல் appeared first on Dinakaran.