டெல்லி : காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37வது கூட்டத்தில் கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.