டெல்லி: காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒன்றிய அரசு இதுவரை முதல்கட்ட அனுமதி கூட வழங்காத நிலையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்ததுடன். நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது.
The post காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.