டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 38-வது கூட்டம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்கின்றனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து, கர்நாடகா, தமிழக அணைகளின் நீர் இருப்பு, நீர் திறப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது
The post காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது appeared first on Dinakaran.