சென்னை: ‘காவிரி – வைகை – குண்டாறு வெள்ளநீர் இணைப்புக் கால்வாய் திட்டம் நாங்கள் பெற்றெடுத்த பிள்ளை என்பதால் அதை விட்டுவிட மாட்டோம்’ என்று சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ. சி.விஜயபாஸ்கர் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் வருமாறு: