திருமலை: ஐதராபாத்தில் கிரெடிட் கார்டு பில் வசூலிக்க சென்ற ஏஜெண்டை வளர்ப்பு நாயை ஏவி உரிமையாளர் கடிக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜவஹர் நகரைச் சேர்ந்த நந்திவர்தன் என்பவர், கிரெடிட் கார்டு மூலம் ரூ.2 லட்சம் கடனை செலுத்த வேண்டியிருந்தது. இந்த கடனை வசூலிக்க ஏஜெண்ட் சத்யநாராயணா நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்றார்.
இதனால் நந்திவர்தன் பில் கட்ட முடியாது எனக்கூறி அவரது வீட்டில் வளர்க்கும் நாயை அவிழ்த்து விட்டதால் அந்த நாய் திடீரென்று சத்யநாராயணா மீது பாய்ந்து அவரைக் கடித்தது. இதில் காயமடைந்த சத்யநாராயணா சிகிச்சைக்கு பிறகு அளித்த புகாரின் பேரில், மதுராநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கிரெடிட் கார்டு பில் வசூலிக்க வந்தவரை நாயை ஏவி கடிக்க விட்ட உரிமையாளர்: ஐதராபாத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.