இந்தியாவின் முக்கிய நகரங்களை நேற்று அதிகாலை பாக். டிரோன்கள், ஏவுகணைகள் குறிவைத்தன. இதை இந்தியா இடைமறித்து அழித்தது. இந்த சூழில் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் டிரோன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புஜ் நகர காவ்டா கிராமத்திற்கு அருகில் இந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கட்ச்-மேற்கு காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சுந்தா இதை உறுதிப்படுத்தினார். விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பொருளையும் அதன் பாகங்களையும் மேலும் விசாரணைக்காக புஜ் விமான தளத்திற்கு எடுத்துச் சென்றனர். அந்த டிரோன் எங்கிருந்து வந்தது, அது சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது அதிகாலையில் மின் கம்பியில் மோதி சேதமடைந்து விழுந்ததா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
டிரோன் கண்டுபிடிக்கப்பட்ட இடம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில் உள்ளது. இதே போல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் ஏவுகணை சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜேதுவால் கிராமத்தில் உள்ள சில திறந்தவெளி பகுதிகள் மற்றும் வீடுகளில் உலோகப் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டது.
The post குஜராத்தில் சிக்கிய டிரோன் பாகங்கள் பஞ்சாப்பில் ஏவுகணை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.