காந்திநகர்: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பீரா பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில், அதில் சென்றுகொண்டிருந்த லாரி மற்றும் கார் கீழே உள்ள மாஹி நதியில் மூழ்கியது. ஏராளமான வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததால் பலரை காணவில்லை என கூறப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததே இந்தப் பால விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மஹிசாகர் நதியின் குறுக்கே கட்டப்பட்ட 43 வருட பழமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
The post குஜராத்தில் பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.