அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டுநடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை யடுத்து, இனக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்.
இந்த கலவரத்தின்போது இங்கிலாந்தை சேர்ந்த இம்ரான், ஷாகீல் தாவூத், முகமது அஸ்வத் ஆகியோர் ஜெய்பூருக்கு சென்று விட்டு காரில் குஜராத்துக்கு வந்து கொண்டிருந்தனர். மூன்று பேரும் குஜராத்தின் சபர்கந்தா மாவட்டம் ப்ரஞ்சித் டவுன் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவர்களின் கார் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதில் அவர்கள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சபர்கந்தாவில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2015 பிப்ரவரி 27ம் தேதி தனி நபர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த விடுதலையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் 6 பேரை விடுவித்து அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
The post குஜராத் கலவரத்தில் பிரிட்டிஷ் பயணிகள் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் விடுதலை செல்லும்: குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.