புதுடெல்லி: குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பனஸ்கந்தா மாவட்டத்தின் தீசா நகருக்கு அருகே இன்று காலை 9.45 மணியளவில் இந்த வெடிவிபத்து நேரிட்டுள்ளது. "இந்தச் சம்பவத்தில் 18 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தைத் தொடர்ந்து கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மேற்கூரை சரிந்ததால் இறந்தனர்" என்று காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய்ராஜ் மக்வானா தெரிவித்துள்ளார்.