குஜராத்: குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கிம் ரயில் நிலையம் அருகே சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. தாதர் – போர்பந்தர் இடையே செல்லும் சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
தாதர்-போர்பந்தர் சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் இன்று பிற்பகல் குஜராத்தின் சூரத்திலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள கிம் நிலையத்தில் தடம் புரண்டது. மாலை 3.32 மணியளவில் ரயில் (எண் 19015) போர்பந்தருக்கு செல்ல ஸ்டேஷனில் இருந்து புறப்படும் போது பயணிகள் அல்லாத பெட்டியின் நான்கு சக்கரங்கள் இன்ஜினுக்கு அடுத்ததாக தடம் புரண்டது.
இந்த சம்பவத்தில் பயணிகளுக்கோ அல்லது ரயில்வே ஊழியர்களுக்கோ காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார். கூடுதல் லூப் லைன் இருப்பதால், அந்த வழித்தடத்தில் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்படவில்லை என மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
The post குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.