சென்னை: குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்;
*குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது.
*அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
*இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது.
*தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு.
*மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
*ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் ஹாரன் பயன்படுத்த கூடாது; ஒலி வெளியிடும் பட்டாசுகளை வெடிக்க கூடாது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.