புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இரண்டாம் நாளாக நேற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் இடஒதுக்கீடுக்கு எதிரானவர்கள். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கு எதிரானவர்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 50 சதவீத இடஒதுக்கீட்டின் சுவரை உடைப்பேன் என்று கெஜ்ரிவால் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
மோடி தனது பேச்சுகளில் பொய் சொல்கிறார், அவரைப் போலவே கெஜ்ரிவாலும் அதைத்தான் செய்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் (கெஜ்ரிவால்) யமுனையில் குளித்து அதன் தண்ணீரைக் குடிப்பேன் என்று கூறினார். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன, அவர் அவ்வாறு செய்யவில்லை, நீங்கள் அழுக்குத் தண்ணீரைக் குடிக்க வேண்டும், ஆனால் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான மதிப்புள்ள கண்ணாடி மாளிகையில் வாழ்கிறார் என்றார்.
The post கெஜ்ரிவால் இடஒதுக்கீடுக்கு எதிரானவர்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.