நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி புதிய கேப்டனான அஜிங்க்ய ரஹானே தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. 3 முறை சாம்பியனான அந்த அணி தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22-ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது.
கடந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறி உள்ளதால் அனுபவம் வாய்ந்த அஜிங்க்ய ரஹானே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். வீரர்கள் மெகா ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயருக்கு கூடுதல் பொறுப்பாக துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.