கேரளா: கேரள மாநிலம் பாலக்காட்டில் 2 பேரை கொலை செய்த வழக்கில் காட்டுக்குள் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு சுதாகர் என்பவரது மனைவியை தனது மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் இவர்தான் என்று அங்கிருந்த ஜோசியர் தெரிவித்த நிலையில் அவரை படுகொலை செய்தார். அதன் பிறகு இவர் சிறை தண்டனை அனுபவித்து அங்கிருந்து பெயிலில் வந்த இவர் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
செந்தாமரை மீண்டும் தங்களுடைய பகுதிக்கு வந்திருக்கிறார். தங்களுடைய குடும்பத்திற்கு ஆபத்து உள்ளது என்ற தகவலை காவல்துறைக்கு தெரிவித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் செந்தாமரையை விசாரித்து அவர் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்ற உறுதியின் அடிப்படையில் அவரை விடுவித்தனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் சுதாகர் மற்றும் அவருடைய தாய் லட்சுமி ஆகியோரை வெட்டி படுகொலை செய்து செந்தாமரை என்பவர் தலைமறைவாகி இருந்தார்.
குற்றவாளியின் வீட்டில் விஷபாட்டில் இருந்த காரணத்தினால் இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்ற கருத்தில் அங்கிருந்த நீர்நிலைகள், மலைப்பகுதிகளில் தேடி வந்தனர். திருப்பூருக்கு தப்பி இருக்கலாம் என்ற நோக்கத்தில் திருப்பூரிலும் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு போலீசார் செந்தாமரையை மலைப்பகுதியிலிருந்து அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் அவரை கைது செய்தனர். கடந்த 2 நாட்களாக தேடிவந்த நிலையில் நேற்று இரவு செந்தாமரை கைது செய்யப்பட்டார். கொலை எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேரள மாநிலம் பாலக்காட்டில் 2 பேரை கொலை செய்த வழக்கில் காட்டுக்குள் தலைமறைவாக இருந்த நபர் கைது..!! appeared first on Dinakaran.