சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் புண்ணியம் பெற்றுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கூடுதல் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள் இந்த ஆய்வின்போது சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர்; கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் பழைய மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில் புனரமைத்து புதுப்பிக்க முதலமைச்சர் நிதி ஒதுக்கினார். கூடுதலாக 300 படுக்கைகளுடன் கொண்டதாக புதுப்பிக்கப்பட்டது. அந்த திறப்பு விழாவில் அமைச்சர் சேகர் பாபு கூடுதல் மருத்துவமனை கேட்டு பகுதி மக்கள் சார்பில் கோரிக்கையை வைத்தார். அதன் பின் முதல் கட்டமாக 55 கோடி ரூபாய் ஒதுக்கி இங்கேயே கூடுதலாக அமைக்க முதலமைச்சர் நிதி ஒதுக்கினார்.
2 ஆவது கட்டமாக 54.82 கோடி ரூபாய் ஒதுக்கி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன, 97% பணிகள் நிறைவடைந்துள்ளது, அடுத்த வாரத்திற்குள் 100 சதவீத பணிகள் நிறைவடைந்து விடும்அடுத்த மாதம் 28 ஆம் தேதி முதலமைச்சர் இந்த மருத்துவமனை திறந்து வைக்க உள்ளார். இந்த மருத்துவனையில் 6 அறுவை சிகிச்சை மையம், மாற்றுத்திறனாளிகள் தனி சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவம், முழு உடல் பரிசோதனை, பணியாற்றும் மருத்துவர், செவிலியர் தங்க அறை என பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
102 மருத்துவர்கள், 234 செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள் இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் கேட்டுள்ளோம், தனியார் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனை கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பொது மருத்துவமனை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை போல் உருவாகிவிட்டது, கொளத்தூர் தொகுதிக்கு முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் புண்ணியம் பெற்றுள்ளது. ஒருநாளைக்கு சராசரியாக 3 ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்கு வரலாம். ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனையில் 2000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள், ஒட்டுமொத்தமாக 5000 பேர் இந்த மருத்துவமனைக்கு புறநோயாளியாக வருவார்கள்.
வள்ளுவர் கோட்டம் பொறுத்தவரை இந்த தை மாதம் திறக்க முயன்றோம், பெரும் மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் காலதாமதம் ஏற்பட்டது, வள்ளுவர் கூட்டத்தை சுற்றி வெளி பூச்சு வேலை அதிகமாக உள்ளது, உள்ளே வேலை குறைவு தான் இன்னும் அதிகபட்சம் 60 நாட்களில் வள்ளுவர் கோட்டம் பணிகள் முடிவடையும். திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழி சாலை அமைக்க நில எடுப்புக்கு 2009 ஆம் ஆண்டு வெறும் 10 கோடி இருந்த நிலையில் தொடர்ந்து அந்த தாமதமானதால் தற்பொழுது நிலமெடுக்க ஆயிரம் கோடி ரூபாய் வரை வந்துவிட்டது, 98% வரை நில எடுப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது, ஒரு பகுதியில் விரிவாக்கப்படி நடைபெற்று வருகிறது, விரைவாக அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்.
வள்ளலாரையும் வள்ளுவரையும் நாங்கள் களவாடவில்லை திமுக தான் களவாடுகிறது முக்கடல் சங்கமிக்கும் கடலில் வள்ளுவருக்கு சிலை நிறுவ ஆரம்பித்தது ஆர்எஸ்எஸ் தான் என்று வானதி சீனிவாசன் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர். தமிழர்களுடைய ஐயன் தான் திருவள்ளுவர், மதத்திற்கு அப்பாற்பட்டவராகத்தான் திருவள்ளுவரின் குரல் உள்ளது, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் திருவள்ளுவர் அதனால்தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்கிறோம். வள்ளுவருக்கு சாயம் பூச நினைப்பவர்கள் வேறு என்ன சொல்வார்கள், கன்னியாகுமரியில் பொறிக்கப்பட்ட கற்கள் சான்றாக உள்ளது,
கன்னியாகுமரியில் உள்ள சிறு குழந்தையை கூட கேட்டால் தெரியும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் தான் திருவள்ளுவர் சிலையை கடினார் திறந்தார் அது எப்படி வாணிதி சீனிவாசனுக்கு தெரியவில்லை அதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பெரியார் குறித்து சீமான் விமர்சனத்திற்கு நோ கமெண்ட்ஸ் நான் பெரியாரிஸ்ட் அதைப்பற்றி பேசினால் ரொம்ப கோபப்படுவேன் என்று கூறினார்.
The post கொளத்தூர் தொகுதிக்கு முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் புண்ணியம் பெற்றுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.