சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், சாதகமான தட்பவெப்பநிலை காரணமாக காய்கறிகள் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறைந்துள்ளது. அதன்படி, முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை தலா ரூ.8 ஆகவும், பீட்ரூட், கத்தரிக்காய், நூக்கல், அவரைக்காய் தலா ரூ.10 ஆகவும் சரிந்துள்ளது.