பாலக்காடு : வயநாடு மாவட்டம் கல்பற்றா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வேலை செய்யும் 26 பேர் அடங்கிய குழுவினர் கடந்த ஞாயிறன்று கோழிக்கோடு கடற்கரை பீச்சை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அப்போது மாலை 5 மணியளவில் கடலில் விளையாடி கொண்டு இருந்தனர். இதில் கல்பற்றாவைச் சேர்ந்தவர்களான அனீஸா (35), வாணி (32), பைசல் (35), பினீஸ்குமார் (41) மற்றும் ஜின்ஷி (30) ஆகியோர் கைகோர்த்தப்படி தண்ணீருக்குள் சென்று விளையாடினர்.
அப்போது 5 பேரையும் கடல் அலை அடித்து சென்றது. பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்து மீட்பு பணியினர் 5 பேரில் ஜின்ஷி என்ற பெண்ணை மட்டும் உயிருடன் மீட்டனர். மற்ற நான்கு பேரின் உடல்களை மீட்டு கொயிலாண்டி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கொயிலாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கோழிக்கோடு மாவட்டத்தில் கடலில் விளையாடிய 4 பேர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.