சச்சின், லாரா, பாண்டிங் ஆகியோருக்கு நிகராக சாதனைகள் செய்திருந்தும் சங்கக்காரா ஏன் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. சக வீரர்கள், விமர்சகர்கள் சங்கக்காராவின் பேட்டிங்கை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை சரியான மேற்கோள்களுடன் விவாதிக்கிறது. சங்கக்காராவின் டெக்னிக், அவருடைய பாணி, ஆட்டம் குறித்த அவருடைய மதிப்பீடுகள் போன்றவற்றையும் இந்தக் கட்டுரை விவாதத்துக்கு உட்படுத்துகிறது.

