புதுடெல்லி: கடந்த 2005ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த காலத்தில், வெளிநாட்டு மதுபான நிறுவனமாக டியாகோ இந்தியாவில் மதுபானத்தை விற்பனை செய்வதற்கான இறக்குமதி அனுமதியை கோரியிருந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு இறக்குமதி அனுமதியை பெற்றுக்கொடுக்க 15ஆயிரம் அமெரிக்க டாலர்களை பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் சி.பி.ஐ பதிவு செய்த எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கடந்த 2004 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக, 20 ஆண்டுகளுக்கு பின்னர் இத்தனை கால தாமதமாக 2025ல் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் பெற்றதாக எந்த புகாரோ, குற்றச்சாட்டோ எவரும் அளிக்காத நிலையில் என் மீது எவ்வாறு சட்டவிரோத பணபரிவர்த்தனையின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். மேலும் இதுபோன்ற விவகாரத்தில் ஒரு அரசு ஊழியர் தான் குற்றம் செய்ய முடியும். ஆனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள தான் ஒரு அரசு ஊழியர் கிடையாது. மேலும் ஒரு அரசு ஊழியர் கூட வழக்கில் சேர்க்கப்படவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
The post சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் சிபிஐ எப்ஐஆர் ரத்து கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.